தமிழ்நாடு

என்ன சின்னத்தில் போட்டி? - இன்று மாலை 4 மணிக்கு விடை

தந்தி டிவி

சின்னம் வழங்கப்படாத கட்சிகளுக்கு இன்று மாலை 4 மணிக்குச் சின்னம் ஒதுக்கும் பணிகள் துவங்கும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்... ரிப்பன் மாளிகை முதல் தளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உலக சாதனை நிகழ்வுக்கு "Elite India records" மற்றும் "India Academy Records" சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தி வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 988 பேரிடம் கையெழுத்து வாங்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதா கிருஷ்ணன் சென்னையில் இதுவரை 9 கோடி ரூபாய் அளவிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ