தமிழ்நாடு

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, நாளையுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 வரை ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதே நேரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றும், ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை