லயன்ஸ் கிளப் சென்னை ஆளுநராக உமா அனில் குமார் பொறுப்பேற்பு சென்னை வடபழனியில் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 3241-எப்-ன் 4-வது அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட ஆளுநராக ஐ.சி.எல். குழும தலைமை செயல் அதிகாரியும், இயக்குநருமான உமா அனில் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நீதியரசர் சேஷசாயி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.