தமிழ்நாடு

ரூ.23 லட்சம் பணம் கொடுத்து லீஸ் எடுத்த வீட்டில் தங்கிய குடும்பம் நடுரோட்டில்.. அம்பலமான மோசடி

தந்தி டிவி

அடமானம் வைத்த வீட்டை, தன்னிடம் சுமார் 23 லட்சம் பெற்றும் குத்தகைக்கு கொடுத்து மோசடி செய்து விட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவனம் நகரில் வசிப்பவர் பூஜா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, அதே பகுதியில் வசிக்கும் அப்துல் ரகுமான் என்பவருக்கு சொந்தமான வீட்டை சுமார் 23 லட்ச ரூபாய் கொடுத்து குத்தைகைக்கு வாங்கி வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், பூஜாவுக்கு குத்தகைக்கு விட்ட அதே வீட்டை, நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து கடன் பெற்ற அப்துல் ரகுமான், பின் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடனை திருப்பி செலுத்துமாறு சில மாதங்களுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பூஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த சூழலில், பைனான்ஸ் நிறுவனத்தினர் வழக்கறிஞருடன் வந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி இருப்பதாக பூஜா குற்றம் சுமத்தி புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

🔴LIVE : Chennai | சென்னையில் கொத்துகொத்துக்காக காகங்கள் மரணம் - அதிர்ச்சி காரணம்

H5N1 Virus | சென்னையில் கொத்து கொத்தாக மடிந்த காகங்கள் - மக்களுக்கு பகீர் எச்சரிக்கை

Modi | TN Election 2026 | தமிழகத்தில் `டார்கெட்டை’ ஃபிக்ஸ் செய்த PM மோடி

Today Gold Price | தங்கம் விலை இன்று அடுத்த பெரும் சரிவு

🔴LIVE : Today Gold Price | மீண்டும் பிரமாண்ட சரிவு - தாராளம் காட்டிய தங்கம்