Nilgiris | LandSlide | தமிழகத்தை உலுக்கிய நிலச்சரிவு | `பர்லியார்' பகுதியில் இறங்கிய டீம்
#nilgiris #landslide #highways #ExpertTeam #ThanthiTV
நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதியில் உத்தரகாண்ட் நிபுணர் ஆய்வு நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உத்தரகாண்ட் மாநில சிறப்பு நிபுணர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 23ஆம் தேதி பெய்த கனமழையால் 14க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 5 நாட்களாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் பாறைகள் அந்தரத்தில் தொங்குவதால் போக்குவரத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.