தமிழ்நாடு

கும்பகோணம் தீ விபத்து 94 பேர் இறந்த 16ஆம் ஆண்டு - பெற்றோர், அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி

94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு, தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தீப்பிடித்து எரிந்தது. அதில், 94 பிஞ்சுக் குழந்தைகள், தீயின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்தக் சம்பவத்தின் 16 ஆம் நினைவு தினமான இன்று, பள்ளி முன் வைக்கப்பட்ட குழந்தைகளின் படத்துக்கு பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், மாலையிட்டும், மலர் தூவியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல், எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ. அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி