தமிழ்நாடு

கும்பகோணம் : அடுத்தடுத்த வீடுகளில் பற்றிய தீயை போராடி அணைத்த வீரர்கள்

கும்பகோணம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது. கும்பகோணம் அருகே சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கோட்டை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது. கும்பகோணம் அருகே சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கோட்டை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி, அடுத்தடுத்து இருந்த 5 வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த நகை, பணம், கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் சாம்பலானது. தீயணைப்புத்துறை வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சம்பவ இடத்தை கோட்டாச்சியர், வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி