மழையில் நனைந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் - டெல்டாவில் அதிர்ச்சி கும்பகோணம் அருகே திருநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மேலும், 10 ஆயிரம் மூட்டை நெல்லைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்