திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், விருப்பமனு அளித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் தெலங்கான ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை பொறுப்பாளர், பிரபு நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.