ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது கேரட்டி அருகே 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அங்குள்ள ஏரியில் பொழுதைக் கழித்தன. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.