பகவதி என்ற பெண்ணிற்கு சொந்தமான பெயிண்ட் கடைக்குள் வந்த இரண்டு இளைஞர்கள், பல்வேறு வகை பெயிண்ட் குறித்து விசாரிப்பது போல நடித்துள்ளனர். பகவதியும் அவர்களுக்கு மாதிரியை காட்டுவதற்காக எழுந்து உள்ளே சென்றுள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள், அங்கிருந்த இரண்டு செல்போன்களையும் திருடிச் சென்றனர். பின்னர் தனது செல்போன்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகவதி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, செல்போன்களை இளைஞர்கள் திருடிச் சென்றது உறுதியானது. இதையடுத்து, பகவதி மற்றும் அவரது கணவர் இருவரும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்று கொண்டிருந்த போது, வழியில் கொள்ளையர்களில் ஒருவனைப் பார்த்துள்ளனர். இவர்களைப் பார்த்து ஓட்டம் பிடித்த கொள்ளையனை, அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.