கோவை மாநகரத்தில் உள்ள நொய்யலாற்றில் சாயக்கழிவு பட்டறையிலிருந்து சாயக்கழிவுகள் திறந்து விடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நஞ்சுண்டாபுரம் சிங்காநல்லூர் தடுப்பணை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாயக்கழிவுகள் கலக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்