மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி கரையோர பகுதியில் 6 ஏக்கரில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 12-வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமை, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு, உணவு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி துவக்கி வைத்தார்.