கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் - கவிதா தம்பதியின் மகள் சாமினி, மாயமான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில், போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் . மாயமான குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.