Kodaikanal | முத்து முத்தாக படர்ந்து நிற்கும் நீர்ப்பனி - கொடைக்கானலில் ரம்மிய காட்சி கொடைக்கானலில் தொடர்ந்து நீர்பனி காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதன் காரணமாக கீழ்பூமி, ஜிம்கானா, பாம்பார்புரம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புல்வெளிகள் மீது முத்து முத்தாக நீர்பனி படர்ந்து காணப்படுகிறது. சூரிய ஒளி பட்டதும் நீர்த்துளிகள் பிரகாசமாக ஜொலிப்பது கண்களுக்கு விருந்தளிக்கிறது. மேலும், நட்சத்திர ஏரியில் சூரிய ஒளி பட்டதும் நீராவி மேலெழும்பும் ரம்மியமான காட்சியையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்தால் நீர்பனி உறைபனியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது