தமிழ்நாடு

"கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை " - சுற்றுலாத்துறை இயக்குநர் தகவல்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சந்தீப் நந்தூரி, வனத்துறையுடன் இணைந்து சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கேரளாவை போல முட்டுக்காடு மற்றும் முதலியார் குப்பம் பகுதிகளில் படகு வீடுகள் அமைக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள கண்டிராத பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்தீப் நந்தூரி கூறினார். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு