கலைஞர் சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் இளைஞர் கைது ஈரோட்டில் நான்கு இடங்களில் கலைஞர் கருணாநிதி சிலைகள் மற்றும் திமுக அலுவலகங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திய வழக்கில், எழுமாத்தூரைச் சேர்ந்த 26 வயது ஹரி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, முனிசிபல் காலனி, மணல்மேடு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், கலைஞர் கருணாநிதி சிலைகளின் கறுப்புக் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட ஹரி விக்னேஷ் மனநல சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.