தமிழ்நாடு

வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமிபாலியல் பலாத்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மானாமதி கண்டிகையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி.

தந்தி டிவி

* ஈஸ்டர் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த அந்த சிறுமி, மீண்டும் வீட்டு வேலைக்கு செல்லமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.

* இது குறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தன்னை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவிக்க அவரது பெற்றோர் அதிர்ந்து போனார்கள்.

* அவர்கள் இருவரும், தன்னை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிராம மக்களுடன் சேர்ந்து சென்று, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

* இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி உத்தரவின்பேரில், பெரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி, அற்புதராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* வீட்டு வேலைக்கு என அழைத்து சென்று சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்