தமிழ்நாடு

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

குழந்தைகளை காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையை பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது, இந்த மருத்துவமனைக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை அறிந்ததை அடுத்து, இந்த உதவியை ஜோதிகா வழங்கியுள்ளார். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க, அதை பெற்று கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது என்று பாராட்டி, அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். தஞ்சை ஆட்சியர் கோவிந்த்ராவும், ஜோதிகாவின் சமூக அக்கறைக்கு தலை வணங்குவதாக பாராட்டு தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி