தமிழ்நாடு

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

1986 ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஜாபர் சேட் 1990 ஆம் ஆண்டு சென்னை கூடுதல் எஸ்.பி.ஆக பணியில் சேர்ந்தவர். தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பிக்கான ரேஸில் திரிபாதிக்கு அடுத்து இடத்தில் இருப்பவர். ஜாபர் சேட் சிபிசிஐடி டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பின்னர், நீட் தேர்வு முறைகேடு, சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் விசாரண நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், ஜாபர் சேட் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவின் டிஜிபியாக இருந்த பிரதீப் வி.பிலிப், தற்போது சிபிசிஐடியின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்