TN Govt | Selfhelp Group | Women | மகளிர் குழுக்களுக்கு ஜாக்பாட் | கோடிகளை இறக்கும் தமிழக அரசு
#TNGovt | #SelfhelpGroup | #Women | #ThanthiTV
மகளிர் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி கடன் வழங்க இலக்கு தமிழகத்தில் 2026-27-ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 13,750 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. செயல்படாமல் உள்ள 20 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும், 45 ஆயிரம் குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் ஆயிரம் திருநங்கைகளை ஒருங்கிணைத்து 180 குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. திருநங்கைகள் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிறுதொழில் தொடங்க உதவிகள் வழங்குவதுடன், 100 பேருக்கு தொழில் பயிற்சியும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, 5 ஆயிரம் நகர்ப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி, 8 ஆயிரத்து 500 மகளிர் குழுக்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.