சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குபின், செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், ஒலிம்பிக் சங்கம் தொடர்பாக மூன்று கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக கூறினார். மேலும், ஒலிம்பிக் பவன் அமைக்க நேரு உள்விளையாட்டு அரங்கில், இடம் வழங்குமாறு அரசை வலியுறுத்தியதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.