தமிழ்நாடு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - லைகாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இந்தியன்2 விபத்து தொடர்பாக லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பியது. இயக்குனர் சங்கர் கடந்த 27 ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவில் ஆஜரானார். பின்னர் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி 3 ஆம் தேதி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள் 2 பேரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நேற்று மாலை விசாரணை நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த மத்திய குற்றபிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை