Thiruvallur Gas Leak | திருவள்ளூரை உலுக்கிய சம்பவம் | ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் ராஜீவ் #thiruvallur #gasleak #ammoniagasleak #tnpolitics #thanthitv திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள, தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில், 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மேலும் 60-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மற்றோரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.