இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம் நவம்பர் 1ஆம் தேதி தொடக்கப்படும் என தமிழக அரசின் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தெரிவித்துள்ளார். செலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்காக ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.