தமிழ்நாடு

தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி - மனைவி, மாமியாரை அடித்துக் கொன்ற கணவர்

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே தேவியகரகம் பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ ஓட்டுநரான இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், முருக்கம்பாடி காலனியை சேர்ந்த சரோஜா மகள் மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாலெட்சுமி, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். மகாலட்சுமியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்காக முருகன் வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சரோஜா, மகாலட்சுமி இருவரும் கடப்பாரை மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், மனைவி, மாமியார் இருவரையும் கொலை செய்து முருகன் தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவான முருகனை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து