தமிழ்நாடு

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனை - முதலமைச்சர் திறந்து வைத்தார்

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனை - முதலமைச்சர் திறந்து வைத்தார்

தந்தி டிவி

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனை - முதலமைச்சர் திறந்து வைத்தார்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சென்னை கொளத்தூரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.கொரோனா மூன்றாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் கே.கே.நகர் , தண்டையார் பேட்டை,அண்ணா நகர் , உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் கூடுதல் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 100 படுக்கைகளுடன் இயங்கி வந்த கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையை தற்போது 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 83 நாட்களில் இந்த மருத்துவமனை 15 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 100 படுக்கை வசதியில் இருந்து 300 படுக்கை வசதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி