தமிழ்நாடு

பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி.. செலவை ஏற்பதாக சொல்லி டிமிக்கி கொடுத்த வீட்டு ஓனர்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தமிழரசன், லக்காபுரம் விஐபி நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரது வீட்டில் பெயிண்ட் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றச் சொல்லி சிகிச்சை செலவை ஏற்பதாக பாலசுப்ரமணியம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசனுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வந்த நிலையில், சொன்னபடி பாலசுப்ரமணியம் சிகிச்சை கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாமல் தவித்து வரும் குடும்பத்தார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

DMK Congress Alliance | "100 சதவீதம் கூட்டணி உறுதி" - `ப.சி’வர காரணம் என்ன?

DMK Congress Alliance | காங்., நீடிக்குமா? விலகுமா? - மொத்த களமும் திக்..திக்.. தருணத்தில்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’