தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - 4000 கன அடியில் இருந்து 5000 கன அடியாக அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து, 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 5000 கன அடி உபரிநீர் நேற்று தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 4000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி