இதுதொடர்பான வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், குற்றச்சாட்டு எழுந்தவுடன் மருத்துவ குழு அமைக்கப்பட்டதாகவும், அவர்கள் அளித்த அறிக்கையின்படி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்றபட்டது ஹெச்.ஐ.வி. தொற்று உள்ள ரத்தம் இல்லை என தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி, மருத்துவ குழு கொடுத்த அறிக்கையையும், வழக்கு குறித்து பதில் மனுவையும் 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.