2013-ல் விஸ்வரூபம் திரைப்படம் கடும் நெருக்கடிகளை சந்தித்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. நீண்ட சிக்கல்களை படம் எதிர்கொண்டபோது, ஆவேசமடைந்த கமல், நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று கொந்தளித்தார்.