இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த ராமச்சந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான பணீந்திர ரெட்டி புதிய ஆணையராக நியமனமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராமசந்திரன், தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.