தமிழ்நாடு

Vedaranyam |HeavyRain |வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.. 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.. 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

thanthitv

வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.. 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு #Vedaranyam #VedaranyamRain #HeavyRain #TamilNaduRain #SaltProduction #SaltIndustry #RainImpact #VedaranyamNews #TamilNaduNews #TamilNews #BreakingNews #ThanthiTV வேதாரண்யத்தில் கனமழை - உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் உப்புப் பாத்திகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பை மழையிலிருந்து பாதுகாக்க, தொழிலாளர்கள் பனை ஓலைகளை கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உப்பின் விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Breaking | CM Vijay | Monsoon | "Plan is On.." | CM விஜய் முக்கிய மீட்டிங்

Madurai | கல்லூரி மாணவனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு.. ரத்தம் சொட்ட சொட்ட ஊருக்குள் ஓடிய மாணவன்..

Breaking | Cauvery Issue | மீண்டும் கூடும் காவிரி மேலாண்மை ஆணையம் | தமிழகம் எடுக்கப்போகும் முடிவு?

CM Vijay | MOU | CM விஜய் முன்னிலையில்.. தமிழகத்திற்கு அடுத்த சர்ப்ரைஸ்

CMVijay | தாய்மாமனாக உசிலம்பட்டி வரும் CM விஜய்.. வந்திறங்கிய தங்க மோதிரங்கள்