தமிழ்நாடு

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த 24 ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து சென்ற புறநகர் ரயிலில், படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, சென்னை பெரம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மெட்ரோ ரயிலில் உள்ளது போல், புறநகர் மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க ரயில்வே துறை , தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI