சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாக எண்ணெய் மற்றும் நெருப்பு இன்றி, 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டது. கல்யாண்மயி என்ற அமைப்புடன் மீனம்பாக்கம் விமான நிலையம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், சமையல் கலை பயிலும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 700 பேர் கலந்து கொண்டனர். கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், செவ்வாழை பாயாசம், சிறுதானிய அவல் போன்ற 300 வகையான உணவுகள் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி நடந்த இந்த சமையல் முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.