கிண்டி ரேஸ் கிளப்-பிடம் சொத்துவரி வசூலிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவு 
தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கிளப்-பிடம் சொத்துவரி வசூலிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவு

கிண்டி ரேஸ் கிளப்-பிடம் இருந்து, 6 கோடியே 43 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

thanthitv

கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான 11 சொத்துக்களுக்கான சொத்து வரி பாக்கி இருப்பதாக கூறி மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை ரேஸ் கிளப் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சொத்து வரி பாக்கி வசூலிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் முன் தங்கள் தரப்பு ஆட்சேபங்களை கேட்கவில்லை என ரேஸ் கிளப் தரப்பில் வாதிடப்பட்டது

வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரேஸ் கிளப்பிடம் சொத்துவரி பாக்கி வசூல் செய்யும் நடவடிக்கைகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி பதிலளிக்கும் படியும் நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.

CM Vijay | Fire Mode-ல் CM விஜய்.. அனல் பறக்கும் தலைமை செயலகம்

🔴LIVE : ``CM விஜய்யின் ஆட்சியை..’’ ஒரே போடாக போட்ட கமல்

ADMK | Congress | ``அதிமுக அமைச்சரவைக்கு வந்தால்..’’ - தன் முடிவை சொன்ன காங்கிரஸ்

CM Vijay | VCK | CM விஜய் அமைச்சரவையில் திருமா? - அவசரமாக கூடும் விசிக

Minister | Cpm, Cpi | அமைச்சரவையில் அதிமுக? -CPM, CPI வெளியிட்ட பரபரக்கும் அறிவிப்பு