தமிழ்நாடு

Dharmapuri Lorry Bus Accident | டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் பலி

டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் பலி

thanthitv

Dharmapuri Lorry Bus Accident | டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் துடிதுடித்து பலி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலசனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி 42 பயணிகளுடன் சென்ற அரசு விரைவு பேருந்து, சாலையோர செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் சரவணன் உயிரிழந்த நிலையில், கண்டக்டர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cellphone Price | மத்திய அரசின் ப்ளான் - ஒரே அடியாக சரிகிறதா செல்போன்கள் விலை

Breaking | Murugan | நடுபழனியில் மாயமான `மரகத முருகர்’பக்தர்கள் அதிர்ச்சி

MK Alagiri Daughter Case| மு.க.அழகிரி மகள் எடுத்த முடிவு - ஏற்பட போகும் திருப்பம்

Chennai High Court | ``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட்

Armstrong Case ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெருங்கிய க்ளைமேக்ஸ் - உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்