கள்ளநோட்டுடன் துணி வாங்க வந்த கும்பல் - மடக்கி பிடித்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் புதியபேருந்து நிலையம் அருகே 200 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து துணி வாங்கிய இளைஞர் உட்பட 3 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மது போதையில் இருந்ததால், விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்ட நிலையில், ராசிபுரம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.