அருண்ஜெட்லியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைவர்கள் டெல்லி சென்றனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.