தமிழ்நாடு

"உயிர்களை போன்றது தான் ஏழைகளின் வாழ்வாதாரம்" - ப.சிதம்பரம்

உயிர்கள் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவுக்கு ஏழைகளின் வாழ்வாதாரமும் முக்கியமானது என பிரதமரி​டம் மாநில முதலமைச்சர்கள் எடுத்துக் கூற வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தற்போதைய சூழ்நிலையில் வரும் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை திரும்பப் பெறுவது தவிர்க்க இயலாததாகவே தோன்றுவதாக தமது பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

* ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது என்றும், அவர்களுக்கு தினசரி ஊதியமோ, வருமானமோ இல்லாத நிலையில் உள்ளதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.

* ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தை கொண்டு போய் சேர்ப்பது மத்திய அரசின் முதல் கடமை என்றும் இதனை அரசால் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

* இதனை செய்ய மத்திய அரசுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும் என்றும், அந்த தொகை மத்திய அரசிடம் உள்ளதாகவும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.

* எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் மத்திய அரசு தங்கள் கருத்தை ஏற்க மறுத்து வருவதாகவும், இது சாத்தியமான திட்டம் என்றும், பொருளாதார ​ரீதியில் நியாயமான நடவடிக்கை தான் என்றும் ப.சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார்.

* இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாத வரை, மத்திய அரசு ஏழைகளை பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்தை, வேலையை இழந்து 18 நாட்களாக உள்ளதாகவும், அவர்களின் சேமிப்பு கரைந்து போய் விட்டதாகவும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.

* மேலும், ஏழைகளில் பலர் உணவுக்காக வரிசையி​ல் நின்று வரும் நிலையில், சாமானிய மக்கள் பட்டினியுடன் செல்வதை இந்த அரசு அவர்கள் பின்னார் இருந்து வேடிக்கை பார்க்கப் போகிறதா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஏழை, எளிய, சாமானிய மக்களின் கைகளில் உடனடியாக பணத்தை கொண்டு போய் சேர்க்கும் ஒற்றை கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்த முதலமைச்சர்களிடம் தனது பணிவான யோசனையை தெரிவித்து உள்ளதாகவும், பிரதமரின் முடிவு எப்படி அமையும் என பார்க்கலாம் எனவும் ப.சிதம்பரம் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்