தமிழ்நாடு

7 மீனவர்கள் மாயமான விவகாரம்:"போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை" - உறவினர்கள் தர்ணா போராட்டம்

7 மீனவர்கள் மாயமான விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் திடீரென மாயமாகினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநில கடல் பகுதியில் மீனவர்கள் சென்ற படகு குப்புற கவிழ்ந்த நிலையில் இருப்பதாக இந்திய கடலோர காவல்படையினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் அல்லது கப்பல் மூலம் மீட்பு பணியை துரிதபடுத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால்17 நாட்கள் ஆகியும் மீனவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகாததால், காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்