அறந்தாங்கி கோட்டாட்சியரை தாக்க முயற்சி - போலீஸ் விசாரணை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கு விசாரணையின்போது, ஹபீப் முகமது, அப்துல்காதர் ஆகியோர் கோட்டாட்சியர் அபிநயாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். மேலும், கோட்டாட்சியரை தாக்க முயன்று, பணி செய்யவிடாமல் தடுத்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் ஊழியர்கள் வெளியேற்றிய நிலையில், போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்த முயன்ற இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.