Farmers Union Protest | தமிழக அரசின் அறிவிப்பு - விவசாயிகள் சங்கத்திடம் இருந்து வந்த ரியாக்ஷன்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே உயர்த்திய தமிழக அரசின் அறிவிப்பு போதுமானதாக இல்லை என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன், தனியார் நிறுவனங்கள் அதிக விலை வழங்குவதால் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் ஆவினில் இருந்து விலகியுள்ளனர் என்றார். தீவன விலை உயர்வு, பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பால் கொள்முதல் விலையை அரசு மறுபரிசீலனை செய்யாததால் திட்டமிட்டபடி வரும் 24-ஆம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.