தமிழ்நாடு

பிரபல நடிகர் மகன் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதல் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சென்னையில் பார்க்கிங் பிரச்சனையில், சினிமா நடிகரின் மகனை 10 பேர் கும்பல் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.துணிவு, குருவி, யூடர்ன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் பிர்லா போஸ். இவர் மதுரவாயலில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இந்நிலையில் இவரது 15 வயது மகனை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தான் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் வசிக்கும் சிறுவனை பார்க்க அவரது நண்பர்கள் வந்த போது, பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தனது காரை சேதப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது, தனது மகன் அவர்களை கண்டித்ததால் மோதல் நிலவியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முன்விரோதத்தில், வீட்டில் தான் இல்லாத போது, டியூசன் சென்று திரும்பிய தனது மகனை காயம் ஏற்படுத்தும் அளவுக்கு 10 பேர் கும்பல் வழிமறித்து தாக்கியிருப்பதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்