சேலத்தில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக அளித்த வாக்குறுதிகள் எதனையும் செயல்படுத்தவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக உதயநிதி ஸ்டாலின் பொய் கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீட் விவகாரத்தில் அனிதாவிற்குப் பிறகு நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களின் தற்கொலைகளுக்கு முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.