Erode | Elephant | பவானிசாகர் அணையில் குட்டியுடன் ஸ்பாட் போட்ட யானைகள் - பீதியில் மக்கள் #erode #elephant #bhavanisagardam #thanthitv பவானிசாகர் அணையின் கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் கரையில், குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீர் மற்றும் உணவு தேடி வெளியேறி வரும் யானைகள், அணையின் புல்வெளிப் பகுதியில் உலாவின. இதனால் அணைக்கு பணிக்குச் சென்ற ஊழியர்கள் பீதியடைந்தனர். பின்னர், பட்டாசுகளை வெடித்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. பகல் நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.