தமிழ்நாடு

நீளமான தலைமுடியை விரும்பும் யானைகள் - போட்டி போட்டுகொண்டு முடி வளர்க்கும் பாகன்கள்

சிறப்பு முகாம்களுக்கு சென்றுள்ள பெண் யானைகளின் சிகையை அழகுபடுத்துவதில் பாகன்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

யானைகளின் வருகையால், அதுவும் பெண் யானைகளின் வருகையால் மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் களைகட்டியுள்ளது.

அளவு கடந்த அன்பை பொழியும் தங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் யானைகளை பாகன்கள் தினம் தினம் அழகுபடுத்தி வருகின்றனர். அதுவும் பெண் யானைகளின் பாகன்கள் அவற்றின் கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் செங்கமலம் அழகிய கூந்தலுடன் வீரநடைபோடுகிறது. சிகை அழகுக்கு போட்டிவைத்தால் செங்கமலமே முதல் இடத்தை தட்டிச்செல்லும் என்று பாகன்கள் தெரிவித்துள்ளனர்.

அழகிய கூந்தலுக்கான போட்டியில் அடுத்த இடத்தில் இருப்பது சங்கரநாராயணசுவாமி கோவில் யானை கோதை... அதேபோல் பளபளக்கும் சிகையை பெற்றுள்ளது அரவிந்தலோசனர் கோவில் யானை லட்சுமி

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை, வைத்தியமாநிதி பெருமாள் கோவில் யானை குமுதவள்ளி ஆகியவற்றின் கூந்தலும் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் அவற்றின் கூந்தல் அழகை ரசித்து பார்ப்பதாக பாகன்கள் தெரிவித்துள்ளனர்.

யானைகளை பராமரிப்பதுடன் அவற்றின் கூந்தலையும் தினம் தினம் பராமரித்து, அலங்காரம் செய்து அசத்திவரும் பாகன்கள், சிகை அலங்காரத்தை யானைகள் விரும்புவதாக கூறுகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்