தமிழ்நாடு

சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள் - சென்னை வந்த தேர்தல் ஆணையர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மற்றும் காவல் துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலிப் ஷர்மா, திரேந்திர ஓஜா ஆகியோரும் சென்னை வதுள்ளனர்.ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகிய இருவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் விமான நிலைய ஒய்வு அறையில் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். சென்னையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கும் தேர்தல் ஆணையர்கள், 4 ந்தேதி மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு