நாயின் உயிரை காப்பாற்ற 10 ஹாஸ்பிடல்கள் ஏறி இறங்கிய முதிய தம்பதி
நாயை காப்பாற்ற 10 மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய முதிய தம்பதி விழுப்புரத்தில் நாயின் உயிரை காப்பாற்ற 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய முதிய தம்பதியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்கிரவாண்டியை சேர்ந்த பரங்கிமலை மற்றும் அவரது மனைவி சந்திரா பார்வோ, வைரஸால் பாதிக்கப்பட்ட நாயை காப்பாற்ற 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு எடுத்து சென்றுள்ளனர். இறுதியாக அரசு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.. முதிய தம்பதியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.