தமிழ்நாடு

தூத்துக்குடி வந்த எகிப்து வெங்காயம் : வெங்காயத்தை வாங்க முன்வராத பொது மக்கள்

தூத்துக்குடியில், எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க மக்கள் முன்வரவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி
வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் வரத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எகிப்த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தூத்துக்குடி காமராஜர் தினசரி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ 130 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும், எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரி​வித்தனர். விலை அதிகமாக இருந்தாலும் உள்நாட்டு வெங்காயத்தையை வாங்கவே பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவு​ம், எகிப்து இறக்குமதி வெங்காய விற்பனை மந்தமாகவே உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். உணவக பயன்பாட்டுக்கு மட்டுமே எகிப்து வெங்காயத்தை வாங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்